நியாயமான சம்பளம் கோரி தொழிலாளர்கள் போராட்டம்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

நியாயமான சம்பளம் கோரி கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலம் நடத்தினர்.

உரிய முறையில் முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள் பேச்சுவாரத்தை நடத்தி பண்டிகை காலத்திற்கு முன்பதாக தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்

இந்த ஆர்பாட்டத்தின் போது சுமார் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.