மாவை எம்.பி பொய் சென்னாரா? மாணவர்கள் ஆதங்கம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

சிறைச்சாலைக்கு நடைபவனியாக சென்ற மாணவர்கள் அனைவரையும் கைதிகளை பார்வையிட அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் பேசியதாக மாணவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொய் உரைத்து விட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மாணவன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் நடை பயணமாக வந்து கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எங்களை கண்டு கதைத்தார்.

அப்போது நாங்கள் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கான அனுமதிகள் எல்லாம் எடுத்து வைத்திருக்கின்றேன் என்றார். நீங்கள் போய் நான் சொன்னதாக சொன்னால் உங்களை உள்ளே செல்ல விடுவார்கள் என்றார்.

நாங்கள் சிறைச்சாலைக்கு வந்ததும் உள்ளே போகக் கேட்டோம் அப்போது எம்.பி வந்து கதைக்கவில்லை. நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் 10 பேரை விடுகின்றோம் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாங்கள் கால் நடையாக கஷ்டப்பட்டு இங்கு வந்தோம். ஆனால் 10 பேரை மட்டுமே பார்க்க அனுமதித்தார்கள். எங்களையும் ஏமாற்ற வேண்டாம். அரசியல் கட்சிகள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.