நிலம் தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் காரணமாக அவ்வீதியினூடாக போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மலையகத்தில் பெய்த கடும் மழையினால் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆறு குடும்பங்களை சேர்ந்த 23பேர் வெளியேற்றப்பட்டதுடன், நிவ்வெளிகம பகுதியில் வீதி தாழ் இறங்கியும் காணப்பட்டது.

குறித்த வீதி பாரியளவில் தாழ் இறங்கியுள்ளதோடு, நிவ்வெளிகம பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் காணப்படுகின்றமையால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, சாமிமலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு ஒன்று எந்நேரத்திலும் சரிந்து வர கூடுமென தேசிய கட்டட ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த வீதி திறக்கப்படும் வரை மாற்று வழியினை பயன் படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன், ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியிலும் பாரிய வெடிப்புகள் காணப்படுவதன் காரணமாக, குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.