உண்ணாவிரதத்தை நிறுத்துவது குறித்து அரசியல் கைதிகளுடன் பேசவில்லை: மாவை

Report Print Thileepan Thileepan in சமூகம்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதா, இல்லையா என்பது குறித்து அதிகநேரம் பேசவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகளை சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தலைவர் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் அவர்கள் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை கைதிகளிடம் தெரிவித்து அவர்களது அபிப்பிராயங்களை அறிந்து அடுத்தக்கட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதி 5 மணிக்கு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும், சட்டமா அதிபருடனும் பேசி முடிவை எடுக்கவுள்ளோம்.

இது குறித்து உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது. ஆனாபடியால் அவர்களிடம் நாங்கள் இந்த கருத்தை சொல்லியிருக்கின்றோம்.

உண்ணாவிரதத்தை நிறுத்துவதா, இல்லையா என்பதைப் பற்றி நாங்கள் அதிகநேரம் பேசவில்லை. அவர்களது விடயங்களை அறிந்த பின் 17ஆம் திகதி சந்திப்பு முடிய அந்த சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகளுடன் அடுத்த நாள் வந்து பேசுவதாக தான் சொல்லியிருக்கின்றோம் என்றார்.