காட்டு யானைகள் தாக்கியதில் வயோதிப தாயும், மகனும் படுகாயம்!

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைகட்டியவெளி கிராமத்திற்குள் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனும் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென காட்டுப் பகுதிக்குள்ளிருந்து உள்நுழைந்த காட்டு யானைகள் வீட்டிலிருந்தோரைத் தாக்கியதில் வயோதிபத் தாய்க்கு கை கால்கள் முறிந்துள்ளதாகவும், மகனுக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.