முதலாளிமார் சம்மேளனத்தின் கூற்றுக்கு தொழிற்சங்கங்கள் மயங்கி விடக்கூடாது! சட்டதரணி இ.தம்பையா

Report Print Thirumal Thirumal in சமூகம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் இம்முறை 25 ரூபாவால் உயர்த்துவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் அடிப்படை சம்பளமாக 575 ரூபாவும், மேலதிக கொடுப்பனவுகளுமாக இணைத்து 936 ரூபாவை வழங்க முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வந்துள்ளமைக்கு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் மயங்கிவிடக் கூடாது என சட்டதரணி இ.தம்பையா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தும் மக்கள் மாநாடு நேற்று ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சமூக அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கூட்டு ஒப்பந்த காலப்பகுதிகளில் 50 ரூபாவும், 25 ரூபாவும் என சிறிய தொகைகளை சம்பள உயர்வாக வழங்குவதை முதலாளிமார் சம்மேளனம் ஒரு சட்டகமாக பாவித்து வருகின்றது.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் இன்றைய வாழ்வாதாரத்திற்கு ஏற்றவாறு 1300 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும்.

அதற்கென இணங்காத முதலாளிமார் சம்மேளனத்திடம் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் வெறுமனே பேச்சுவார்த்தைக்கு சென்றோம். பேசினோம்.

ஒத்து வரவில்லை என்றொல்லாம் கூறிக் கொண்டு வெளிநடப்பு செய்வது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

இவ்வாறு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு பதிலாக மக்களின் அபிலாஷைகளையும், கட்சி தலைவர்களின் அபிலாஷைகளையும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு இணங்கி வராத தொழிற்சங்கங்களுக்கு என்ன கௌரவ குறைச்சல் ஆகிவிட போகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரத்தில் முதலாளிமார் சம்மேளனத்திடம் இத்தொழிற்சங்கங்கள் முறையாக பேசப்படுவது இல்லை என குற்றம் சுமத்திய இவர், மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் கலந்தாலோசித்து அந்த ஆலோசனையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுறுத்துவதற்காகவே முதன் முறையாக இந்த மாநாடு கூடப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers