விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தர பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெள்ளிக்கிழமை வீதியால் சென்ற பத்து வயதுடைய சிறுமியொருவரை மோட்டார் சைக்கிளை விட்டு மோதி விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers