பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை!

Report Print Steephen Steephen in சமூகம்

ஜா-எல பொலிஸ் பிரிவின் கனுவன, ராஜமவத்தை பிரதேசத்தில் இன்று மாலை 5 மணியளவில் பெண்ணொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற இந்த பெண் கூரிய அயுதம் ஒன்றினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலக்கம் 64 கனுவன, ரஜகஹா மாவத்தை , ஜா-எல என்ற முகவரியை சேர்ந்த 60 வயதான இந்திரா போலின் டி சில்வா விக்ரமதிலக்க என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers