உணவகம் ஒன்றில் திருடிய இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியாவில் உள்ள உணவகமொன்றினை உடைத்து பொருட்களை திருடிய இருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நகர சபை வீதி,ஜாயா நகர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் உணவக உரிமையாளருடன் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக நிகழ்ந்த வாய்த்தர்க்கம் காரணமாக இரவு வேளையில் உணவகத்தினை உடைத்து பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, உணவக உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்களை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers