மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்களை ஏமாற்றமடைய செய்யும் கடற்பாசி

Report Print Rusath in சமூகம்

கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் தற்போது கரைவலை மீன்பிடிக்கான பருவகாலமாகும் இதன் அடிப்படையில் தற்போது மட்டக்களபின் கரைவலை தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் மீன்பிடி தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கரையை அண்டியதாக காணப்படும் ஒருவகையான கடற் பாசி காரணமாக தங்களது தொழிலை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடற்கரையில் கூடுதலான கடற்பாசி மீன்பிடி வலையில் சிக்கியதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

நாங்கள் வருடத்திற்கு ஒருமுறையே இந்த கரைவலை மீன்பிடி தொழிலில் மேற்கொள்ள முடியும் இம்மாதமே இக்கரைவலை மீன்பிடி தொழிலை மேற்கொள்ள கூடிய பருவகாலமாகும்.

இருந்தும் இம்முறை என்றும் இல்லாதவாறு ஒரு புதுவகையான கடற்பாசி காணப்படுகின்றது. நாங்கள் மீன்களை மையப்படுத்தியதாக வலையால் வளைகின்றோம்.

ஆனால் எங்களுக்கு மீன்களுக்கு பதிலாக இந்த கடற்பாசியே கிடைக்கின்றது. இது பெருமளவில் வலையில் சிக்குகின்றன. இதனால் வலையும் சேதமாகுவதுடன் தொழிலாளர்களையும் களைப்படைய செய்வதுடன் தொழிலில் ஆர்வமின்மையையும் ஏற்படுத்துகின்றது.

எமது மீன்பிடி வரலாற்றில் இவ்வகையான கடற்பாசியை கண்டத்தில்லை இருந்தும் இம்மாதாம் முழுவதும் இவ்வாறான நிலை ஏற்படுமாயின் இத்தொழிலை நம்பிவாழும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers