இழப்பீட்டு பணியத்திற்கான உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் விரைவில்!

Report Print Ajith Ajith in சமூகம்

இழப்பீட்டு பணியகத்திற்கான உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நல்லிணக்க பொறிமுறைக்கான செயலகத்தின் பொதுச்செயலாளர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுக்கான பணியகத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் 16 மேலதிக வாக்குகளினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 56 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இழப்பீட்டுக்கான பணியகமானது அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் கிடைத்தப் பின்னர் ஜனாதிபதியினால் இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரசியலமைப்பு சபையினால், பரிந்துரைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நியமிக்கப்படத் தவறின், அவர்கள் அரசியலமைப்பு சபையினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக கருதப்படும் என்று சட்டமூலத்தின் 20 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.