புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கலந்துரையாடினேன்! அது சட்டவிரோதம் அல்ல: ஐ.தே.கவின் அமைச்சர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரியில் நேற்றைய தினம் அமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார், தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்தோடு கலந்துரையாடவுள்ளோம்.

பேச்சுவார்த்தையில் அரசாங்கம் இணக்கப்பாட்டுக்கு வாராவிட்டால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக கூறுகிறார்.

அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தாங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் தான் அரசாங்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பேச்சுவார்ததை இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறன.

யார் யாரோடு வேண்டுமானாலும் பேசலாம் அது ஒரு பிரச்சினை அல்ல நானும் அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினேன், அதாவது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதா புதிய முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் கலந்துரையாடினேன்.

கடந்த காலங்களில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று கொண்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கலந்துரையாடினேன்.

அது சட்டவிரோதம் அல்ல ஏன் என்றால் நானும் கலந்துரையாடல் அமைச்சர் அதேபோன்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாரோடு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காபந்து என்ற அரசாங்கம் வாராது, காபந்து என்றால் ஆபத்து என்று அர்த்தம்.

ஆபத்து வரும் என்று மஹிந்த ராஜபக்ஷவோ மைத்திரிபால சிறிசேனவோ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ சொல்லவில்லை. மனோகணேசன் சொல்லவில்லை. இதனை சொல்வது எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா கூறுகிறார்கள். இவர்கள் யார் நாடாளுமன்றத்திற்கு பின்புற கதவு வழியாக தலையில் முக்காடு போட்டு கொண்டு வந்தவர்கள்.

எஸ்.பி.திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்காரர், கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலப்பகுதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரத்திற்கு எதிராக தலவாக்கலையில் வைத்து பொய்யான விமர்சனங்களை செய்து வந்தார்.

அதுமட்டும் அல்ல யானை, ஊழியர் சேமலாப நிதியினை விழுங்கிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இன்று பொகவந்தலாவையிலே இடம்பெறுகின்ற நடமாடும் சேவையில் ஊழியர் சேமலாப நிதி திணைக்களம் இருக்கிறது.

அங்கு சென்று மக்களுடைய இலக்கத்தை கூறி மக்களின் ஊழியர் சேமலாப பணத்திலே எவ்வளவு நிலுவை தொகை இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும், இதேவேளை மாகாணசபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாத காலபகுதியில் பலமுறையில் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

நோர்வூட் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான பா.சிவனேசன் மற்றும் பழனிவேல் கல்யானகுமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற நிகழ்வில், அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார, அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி. சுமனசேகர மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers