மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பொதுமக்களின் நிலை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு ஏ-9 பிரதான வீதியில் காணப்படும் பிரதான மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் உள்ள போதும் நோயாளர்கள் உரிய சேவைகளை உரிய நேரத்தில் பெறமுடியாது நீண்ட நேரம் காத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலை செல்கின்றனர். இந்த நிலையில் அதிகளவான நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வைத்தியாலையில் உள்ள குறைகள் தொடர்பில் பலதடவைகள் பிரதேச அபிவிருத்தி குழுகூட்டம், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டதோடு வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று அவர் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார் இருப்பினும் நிலைமைகள் சீராகவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers