திருகோணமலையில் நீரில் மூழ்கிய பல பகுதிகள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றிரவில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக லவ்லேன், துளசி புரம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு, வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் பேராறு மற்றும் வான் எல பகுதிகளில் சில வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மக்கள் இடப்பெயர்வுகள் ஏற்படாத போதிலும் அன்றாட மக்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் பத்து வீடுகளுக்கும் அதிகமான அளவில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அத்தோடு வடிகாண்களில் வெள்ள நீர் அதிக அளவில் நிரம்பி வழிந்தோடி வருகின்றது. இந்த மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.