குறைகின்றது அரிசியின் விலை?

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஒரு கிலோ அரிசியின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரிசிப் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட 10 ரூபா குறைத்து வழங்குவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.