கொழும்பில் சேரும் பெருந்தொகை குப்பை!

Report Print Vethu Vethu in சமூகம்
253Shares

கொழும்பு நகரில் நாாளாந்தம் சேரும் குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்காக பல கோடி ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

முகாமைத்துவ நடவடிக்கைக்காக மாதாந்தம் 10 கோடியே 80 லட்சம் ரூபா மாதாந்தம் செலவிடப்படுவதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நகரத்தில் தினசரி 600 மெட்ரிக் டன் குப்பை சேர்க்கப்படுகிறது. ஒரு டன் குப்பைக்கு 6000 ரூபா செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் 6 பொறியியல் அலுவலக போக்குவரத்திற்காக தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் இரண்டிற்கு மாதம் 15 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.

கெரவலப்பிட்டியவில் குப்பையை கொட்டுவதற்காக மாதாந்தம் 40 லட்சம் ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாநகர மேயர் மேலும் குறிப்பிட்டார்.