தந்தையால் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Report Print Kamel Kamel in சமூகம்
250Shares

மகளை கொன்று உடலை தீயிட்டு கொளுத்திய தந்தையொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி காந்த மத்துமபட்டபெந்தி குறித்த தந்தைக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒட்டுகுளம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 வயதான சசினி நெத்மா என்ற சிறுமியே படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் எரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் சந்தன எதிரிசிங்க என்ற 32 வயதான சிறுமியின் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட சிறுமி விசேட தேவையுடையவர் என்பது குறிப்படத்தக்கது.