இலங்கைக்கு வந்த இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று அதிகாலை சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்களால் கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.