கால்நடைகளின் நடமாட்டத்தினால் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்

Report Print Ashik in சமூகம்
52Shares

மன்னார் பிரதான வீதிகளில் இரவு, பகல் பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன2.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமறிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் - யாழ் பிரதான வீதி, மன்னார் - மதவாச்சி பிரதான வீதி மன்னார் - நானாட்டான் பிரதான வீதி ஆகிய முக்கிய பிரதான வீதிகளில் பகல், இரவு பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.

கூட்டம் கூட்டமாக கால்நடைகள் வீதிகளில் நடமாடுவதினாலும், வீதிகளில் கூட்டமாக கிடப்பதினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.

குறித்த கால் நடைகளை மேய்ச்சல் தரவை, அல்லது பட்டிகளில் வைத்து பராமறிக்க வேண்டும். ஆனால் கட்டாக்காலி கால்நடைகள் போல் வீதிகளில் திரிகின்றன.

இதனால் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது. எனவே உள்ளூராச்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இவ்விடயங்களில் தலையிட்டு கால்நடைகளின் மிதமிஞ்சிய நடமாட்டங்களை கட்டுப்படுத்தி மக்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.