வவுனியாவில் இளைஞரொருவர் உயிரிழப்பு

Report Print Theesan in சமூகம்
463Shares

வவுனியாவில் இன்று காலை ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இறம்பைக்குளம் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் துவிச்சக்கரவண்டி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாடு குறுக்காக வீதியின் நடுவே பாய்ந்துள்ளது.

இதன்போது பின்னால் வந்த பேருந்து இளைஞனை மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.