வழக்குக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் தப்பி ஓட்டம்

Report Print Yathu in சமூகம்
54Shares

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு இன்று விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதன்போது பாதுகாப்பினை மீறி பொலிஸ் பிடியிலிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

தொடர்ந்து, பொலிஸார் மற்றும் சிறைக் காவலர்கள் குறித்த நபரை பிடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் புகையிரத வீதியை கடந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், தப்பி ஓடிய நபரை பிடிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.