நள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

Report Print Vethu Vethu in சமூகம்
562Shares

இரத்தினபுரியில் பேஸ்புக் விருந்து வைத்த இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துரேகந்த பிரதேச வீடு ஒன்றில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்ட 35 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த விருந்து, நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விருந்து நிறைவடைந்து மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த 4 பேர் முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் விருந்தில் கலந்து கொண்ட பலர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் பேஸ்புக் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளை கைது செய்துள்ளனர்.

எனினும் வாகன விபத்திற்கு தொடர்பாக 4 பேர் பொலிஸ் பொறுப்பில் வைக்கப்பட்ட நிலையில் ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகனத்திற்குள் 4 இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக தெரியவந்துள்ளது.