பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

Report Print Theesan in சமூகம்
69Shares

மன்னார், மடு பிரதான வீதியில் பாடசாலை மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார், மடு பிராதன வீதியில் சென்ற பேருந்தை வழிமறித்த குஞ்சுக்குளம், மாதா கிராமத்தில் ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு பேருந்து சேவை மேற்கொள்ளுமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலைக்குச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகின்றது எனவே எமது பகுதிக்கு பேருந்து சேவை ஒன்றினை மேற்கொள்ளுமாறு கோரியே மாணவர்கள் இப்போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

மன்னாரில் பொதுமக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் குறித்த குஞ்சுக்குளம், மாதா கிராமத்திற்கு பேருந்துச் சேவை மேற்கொள்ளப்படுவதில்லை.

எனவே, இதன் காரணமாக மாணவர்கள் உட்பட அப்பகுதியிலுள்ளவர்கள் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றதாக பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி வழங்கியுள்ளனர்.