வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்
46Shares

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.

நடுவூற்று, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் சண்டையொன்றின் போது ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் சந்தேகநபர்களுக்கெதிராக தொடரப்பட்ட வழக்கின் போது வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே பொலிஸார் அவர்களை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.