வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அரசாங்க அதிபரை காணச்சென்ற ஊடகவியலாளர்களை பிரதான வாயிலில் கடமையிலுள்ள பொலிஸார் உட் செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா அரசாங்க அதிபரை சந்தித்து மனுக்கொடுப்பதற்கு ஐயப்பன் சாமிகள் குழுவினருக்கு இன்று காலை அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அச்செய்திகளை சேகரிப்பதற்காக அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களை மாவட்ட செலயகத்தின் வாயிலில் கடமையிலிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன், உட் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து நீண்ட நேரத்தின் பின்பே ஊடகவியலாளர்கள் உட் செல்லவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச அதிபரின் செய்திகளை சேகரித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்குச் செல்லும் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி மக்களுக்குச் செல்லும் செய்திகளை தடுப்பதற்கு பொலிஸார் முயலக்கூடாது எனவும், அவர்களின் கடமைகளுடன் நின்று தமக்கான பணிகளைச் செய்வதற்கு மாவட்ட செயலகம் உரிய நடவடிக்கைகளை பொலிஸாருக்கு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.