ஜா-எலயில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

Report Print Manju in சமூகம்
133Shares

ஜா-எல -கணுவன ரஜமாவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணிப் பிரச்சினை காரணமாவே குறித்த பெண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஜமாவத்தை பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த 60 வயதான பெண்ணொருவர் நேற்று கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இரத்தினபுரியில் ரக்வான- ரம்புக்க பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய மற்றொரு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மலை 2.30 மணியளவில் பிரத்தியேக வகுப்பிற்குச்சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த மாணவர் தற்போது இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட மாணவன் பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் சரீரப்பணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.