தந்தை மற்றும் மூன்று பிள்ளைகளின் உயிர் பிரிந்த சோகம்! தாய் தனிமையில்

Report Print Manju in சமூகம்
217Shares

தாயை மட்டும் தனியாக விட்டு தந்தையும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் தெஹியத்த கண்டியில் இடம்பெற்றுள்ளது.

தெஹியத்தகண்டிய பிதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 வயதான தாய் மட்டுமே விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பொலன்னறுவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று பிற்பகல் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவில் சந்துன்புர - லிஹினியாகம வீதியில் உத்தலபுர பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தாய், தந்தை அவர்களின் மூன்று மகன்மாரும் பயணித்துள்ளனர். விபத்தில் படு காயமடைந்த 35 வயதான தந்தை, 14 மற்றும் 10 வயது மகன்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

ஐந்து வயது மகன் மற்றும் 35 வயதான தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் தீவிர நிலையைக் கருத்தில் கொண்டு பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மேலதிக மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.