கிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கம் நிகழ்வு இன்று கிளிநாச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்பட துறையில் ஆர்வமாக செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் இறுதி பகுதியில் தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களாக திகழும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.