கிளிநொச்சியில் சர்வதேச விழிப்புணர்வற்றோர் தினம் நடைப்பயணம்

Report Print Suman Suman in சமூகம்
24Shares

வன்னி விழிப்புணர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புணர்வற்றோர் தினம் இன்று கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விழிப்புணர்வற்றோர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக விழிப்புணர்வு நடைப்பயணம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழிப்புணர்வு நடைப்பயணம் கரைச்சி பிரதேச செயலகம் வரை சென்றுள்ளதுடன் பிரதேச சபை தவிசாளரிடம் விழிப்புணர்வற்றோருக்கான நூலக வசதியினை ஏற்படுத்தி தருமாறும் மற்றும் தமக்கான ஓய்வு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக காணி ஒன்றை பெற்று தருமாறும் கோரி மகஜர் கையளித்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தை அடைந்துள்ளதுடன் அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கலந்து கொண்டுள்ளார்.