வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் குடும்ப உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 600 நாட்களை எட்டியுள்ளது.
இதையடுத்து இன்று கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து விஷேட வழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேரணியாக பிரதான வீதி வழியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஜார் வீதி வழியாக ஹொறவப்பொத்தான வீதியாக சென்று அங்கிருந்து நீதிமன்றம் வழியாக போராட்ட களத்திற்கு கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டவர்கள் பேரணியாகச் சென்றனர்.
இதேவேளை, “அரசியல் கைதிகளின் தாய்மாரும் வீதியோரத்தில் தான், காணாமல் ஆக்கப்பட உறவுகளின் தாய்மாரும் வீதியோரத்தில் தான் நிற்கின்றார்கள்.
எங்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தான் நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்வதாக” கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.