விடைபெறும் பொலிஸ்மா அதிபர் அதிபர் பூஜிதவுக்கு கொரியாவுக்கான தூதுவர் பதவி?

Report Print Rakesh in சமூகம்
123Shares

பொலிஸ்மா அதிபர் பதவியை இவ்வாரம் இராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்படும் பூஜித ஜயசுதந்தரவுக்கு தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக அவர் நியமிக்கப்படவுள்ளார் என்றும், பதவி துறந்த கையோடு புதிய பதவியேற்று நாட்டைவிட்டு வெளியேறுவார் என்றும் தெரியவருகின்றது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுதந்தர பதவி துறக்கவேண்டும் என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன்படி இவ்வாரம் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வெளிவிவகார சேவைக்கு 70 வீதம் தகைமை அடிப்படையிலும் 30 வீதம் அரசியல் ரீதியிலும் நியமனங்கள் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ஆட்சியின்போது பொலிஸ்மா அதிபராக இருந்த மஹிந்த பாலசூரியவுக்கு, பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.