வவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்
20Shares

வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் க.பரந்தாமனின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டம் நெடுங்கேணி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் தொடர்பிலும் இப்பகுதியில் பரவும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வாக குடிநீரை சுகாதார பரிசீலனைக்கு உட்படுத்தி பயன்படுத்தல், விவசாயிகள் யானைகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக மின்சார வேலியமைத்தல், மற்றும் அமைச்சுக்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்க்கொள்ளப்பட்டன.

இதேவேளை, இந்த கூட்டத்தில் வவுனியா ஐ.தே.க.அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.