இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர்கள் நீண்ட தொடரை விளையாடி வருகின்றனர்.
அதற்கமைய இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று பயிற்சிப் போட்டியில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு பாம்பு ஒன்று வந்ததாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
பின்னர் அங்கிருந்தவர்கள் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாம்பினை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நீண்ட நேர முயற்சியின் பின்னரே அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.