ஆவா குழுவிற்கு ஆயுதம் விநியோகித்தவர் கைது!

Report Print Murali Murali in சமூகம்
435Shares

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவினருடன் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்தார் என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் ஏற்கனவே குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும், குறித்த நபர் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.