அரசியல் கைதிகள் விவகாரம் : யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
101Shares

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடை பயணத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டு நடைபயணம் மேற்கொண்ட மாணவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமீனன் உடன் நடைபயண போரட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் ஐ.நா யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்தனர்.