உலக இராணுவ வல்லுனர்களின் ஆச்சர்யக் கண்களை அகல விரிக்கச் செய்த ஒப்பற்ற ஒரு மீட்பு நடவடிக்கை குறித்து நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.
வெறும் 53 நிமிடங்களில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வெற்றியையே கண்முன் காட்டிய ஒப்பரேஷன் என்டபே குறித்து பலரும அறிந்திருக்க வாய்ப்பில்லை.
உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் இடம்பெற்ற, இஸ்ரேலின் மிகப்பெரிய ஒரு மீட்பு நடவடிக்கையே இந்த ஒப்பரேஷன் என்டபே.
போரியல் வரலாற்றில் அதுவரையில் நடைபெறாததும், இனிமேலும் நடைபெற முடியாததும் என்று போரியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகின்ற ஒரு அதிரடி நடவடிக்கையே இது.
உலக ராணுவங்கள் அனைத்தையும் மிகுந்த ஆச்சரியத்துடனும், சற்று அச்சத்துடனும் திரும்பிப் பார்க்வைத்த ஒப்பரேஷன் என்டபே என்ற அந்த வரலாற்றுச் சாதனை படை நடவடிக்கையைப் பற்றிய ஒரு ஆய்வு இவ்வார உண்மையின் தரிசன நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டுள்ளது.