மட்டக்களப்பில் சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் சர்வதேச விழிப்புலனற்றோர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வு, இன்று மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகிய விழிப்புணர்வு ஊர்வலமானது தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மண்டபத்தினை சென்றடைந்ததினை தொடர்ந்து, அங்கு பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.