வவுனியாவில் மண் பறித்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா, மணிப்புரம் பகுதிக்கு டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற வாகனச் சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் வவுனியா, மணிப்புரம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

செட்டிகுளம், வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அன்ரன் ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் டிப்பர் வாகனத்திலுள்ள மண்ணை வீட்டிற்குள் பறித்துவிட்டு உயற்றிய பெட்டியுடன், வாகனத்தை வீட்டிற்கு வெளியே செலுத்தியுள்ளார்.

இதன்போது வீதியிலிருந்த மின்கம்பத்தில் பெட்டி முட்டிய போது டிப்பர் வாகனத்திற்கு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் வாகனத்தில் இருந்த சாரதிக்கும் மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.