பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கும் புதுக்குடியிருப்பு பிரதான தபாலகம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், தனியார் கட்டடங்களில் நீண்ட காலமாக இயங்கி வரும் பிரதான தபாலகத்திற்கு நிரந்தரக் கட்டடத்தினை அமைத்து தருமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதான தபாலகமானது இதுவரை நிரந்தரக்கட்டடம் இன்றி தொடர்ச்சியாக தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வை அடுத்து இத் தபாலகமானது கடந்த 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக தனியார் வீ்டு ஒன்றில் பெரும் இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது.

இந்த தபாலகத்திற்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் காணி வழங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான கட்டடம் இதுவரை அமைக்கப்படாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தபாலகம் இவ்வாறு தனியார் வீட்டில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதனால் இதன் கீழுள்ள ஆனந்தபுரம் உபதபாலகம், உடையார்கட்டு உபதபாலகம் மற்றும் விசுவமடு உபதபாலகம் ஆகியவற்றிற்கான பணிகளை முன்னெடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பெரும் நெருக்கடிகள் காணப்படுவதாகவும் தபாலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.