மனிதர்களை மிஞ்சிய தாய் பாசம்! சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை

Report Print Vethu Vethu in சமூகம்

மஸ்கெலியாவில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளுக்கு பூனை ஒன்று தாயாக மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாமிமலை, கரவில தேயிலை தோட்டத்தில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளை பூனை தந்தெடுத்துள்ளது.

சிறுத்தை குட்டிக்கு பூனையின் தாய் பாசம் கிடைத்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தேயிலை தோட்டத்தின் வாய்க்காலுக்குள் இந்த சிறுத்தை குட்டிகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளை தோட்ட தொழிலாளர்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மூன்று வாரமுடைய சிறுத்தை குட்டிகளுக்கு பூனை பால் கொடுத்துள்ளது. பூனையின் மூன்று குட்டிகளையும் சேர்ந்து ஐந்து குட்டிகளாக பாசமாக வளர்த்து வருகிறது.

பூனையின் பாசமான செயற்பாடு குறித்து வனவிலங்கு அதிகாரிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.