சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, சூரியபுர பகுதியில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கண்டி வீதி, யக்கல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடித் திரிந்த நிலையில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸாரினால் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அனுமதிப்பத்திரங்கள் இல்லாமை, மற்றும் மோட்டார் சைக்கிளினுள் சிறிய கத்தியொன்றினை மறைத்து வைத்திருந்தமை போன்ற குற்றச் செயல்களின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers