கிணற்றுக்குள் இறங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாக கிணறு ஒன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரதேச சபை ஊழியர்கள் சுமார் 50 அடி ஆழம் கொண்ட குறித்த பிரதேச சபை கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

இந்த கிணற்றில் இருந்து நீர்தாங்கிகள் மூலம் மக்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்காவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு பிரதேச சபை அதிகரி ஒருவர் தகவல் வழங்கியதையடுத்து, ஆபத்தான வெடிப்பொருட்களை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.