கிளிநொச்சி கலைமகள் வித்தியாலயத்தில் தென்னிந்திய திரைப்படக் குழுவினர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் கணினிக்கூடம் மாணவர் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி - சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் பாடசாலை முதல்வர் பெருமாள் கணேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திரையுலக தயாரிப்பாளரான பாரதிராஜா, தயாரிப்பாளரும் நடிகருமான பாக்கியராஜ், இளம் நடிகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

லண்டனில் உள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் 1.5 மில்லியன் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இக்கணினிக்கூடம் இன்று மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers