மாபெரும் ஒன்றுகூடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Report Print Sumi in சமூகம்

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்தில் உள்ளது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் விசேட உரையாற்றவுள்ளதோடு தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளைஞர், யுவதிகள் போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers