பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் ! காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்

Report Print Manju in சமூகம்

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற விசாணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தபெண் தனது முறைப்பாட்டில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

"என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகனே மூத்தவர். அவர் வேலை செய்கிறார். மகள் இளையவள். அவள் க.பொ.த சாதாரண தரம் படிக்கிறாள். எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.

என் மகளும் நானும் அன்று காலை வீட்டில் இருந்தோம். நான் எனது அறையில் தூங்கினேன். என் மகள் அவளுடைய அறையில் இருந்தாள்.

காலையில் அறையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென இரண்டு இளைஞர்கள் அறையில் நுழைந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுடன் அதனை தொலைபேசியில் வீடியோ எடுத்தனர்.

அதன்பின்னர், என்னுடைய தங்க நகைகளை எடுத்துக்கொண்டு யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் என்று அச்சுறுத்தி சென்றனர். உடனே எனது மகளை நினைத்து பயத்துடன் அவளது அறைக்குச்சென்று அதைப் பற்றி கேட்டேன்.

அவர்கள் அறைக்கு வந்தார்கள், ஆனால் துஷ்பிரயோகம் செய்யவில்லை என மகள் பதிலளித்தார் என அதில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தாயின் முறைப்பாட்டின் படி, அவரது மகள் மீது பொலிஸாரின் சந்தேகம் திரும்பியது. பொலிஸார் அப்பெண்ணின் மகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

முதலில் அவரது கைத்தொலைபேசியைத் தருமாறு பொலிஸார் கேட்டதும், தான் தொலைபேசி பாவிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவரது செயற்பாடுகளில் சந்தேகம் வலுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் விசாரணைகளை மேற்கொண்டதில் அவள் தொலைபேசி பாவிப்தைக் கண்டறிந்துள்ளனர்..

அதன் பின்னர் அந்த சிறுமியும் தொலைபேசி வைத்திருப்பதை ஒப்புக்காண்டுள்ளார்.

அவரது தொலைபேசியை சோதனை போது, அவர் தொடர்ச்சியாக உரையாடிய தொலைபேசி இலக்கம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

அவர் நீர்கொழும்பைச் சேர்ந்த இளைஞடன் தொடர்ச்சியாக உரையாடியுள்ளார். பேஸ்புக் ஊடாக குறித்த இளைஞன் நட்பாகி காலப்போக்கில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

நெருக்கம் அதிகமானதில் குறித்த இளைஞன் தனது காதலியிடமிருந்து நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார்.

காதலன் மீது பைத்தியமாக இருந்த அந்த சிறுமி அந்த கோரிக்கையைப் பற்றி யோசிக்காமல் விரைவில், 'Viber' மூலம் தனது நிர்வாண புகைப்படங்களை குறித்த இளைஞனுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அந்த இளைஞன் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எனினும் அவள் பணம் எதுவும் இளைஞனுக்கு கொடுக்கவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அவள் இளைஞனுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்று பொலிஸார் சந்தேம் வெளியிட்டனர். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த படியால் அந்த இளைஞனை விட்டு விலக நினைத்துள்ளார்.

எனினும் தன்னை நிராகரிக்க நினைத்த காதலிக்கு நல்ல பாடம் கற்பிக்கவெண்டுமென தன்னிடமிருந்த துரும்பை பாவிக்க தொடங்கியுள்ளார் அந்த இளைஞன்.

தன்னிடமிருந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றவுள்ளதாக மிரட்டியுள்ளான். அதன் பின்னர் அவளால் ஒன்றும் செய்ய முடியால் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டமென கோரியுள்ளார்.

எனினும் மீண்டும் குறித்த இளைஞன் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளான்.

அவன் கேட்ட அளவு பணம் தன்னிடம் இல்லை எனதெரிவித்தபோது, உனது அம்மாவின் தங்க நகைகளை தருமாறு கேட்டு மிரட்டியுள்ளான்.

உதவியற்ற நிலையில் குறித்த சிறுமி இறுதியாக, தன் வீட்டுக்கு வந்து என் தாயின் தங்க நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னுடைய அண்ணா வீட்டில் இல்லாத நேரம் வருமாறு கூறியுள்ளார். அதன்படியே இந்த சம்பவம் கடந்த 12ம் திகதி அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்தஇ ளைஞன் தனது இரண்டு நண்பர்களையும் அவளுடைய வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அந்த இளைஞர்களும் , அவளுடைய தாயைத் துஸ்பிரயோகம் செய்ததுடன், தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார், சிறுமியின் காதலனான அசங்க என்பவரை கைது செய்தனர்.

தங்க நகைகளை மட்டுமே எடுத்து வருமாறு தெரிவித்தேன். அம்மாவையோ, மகளையோ துஸ்பிரயோகம் செய்யுமாறு கூறவில்லை என சந்தேக நபரான அசங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அந்த இளைஞன் உண்மையை மறைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.