யாழில் சிறப்பிக்கப்பட்ட அப்துல்கலாமின் பிறந்த தினம்

Report Print Dias Dias in சமூகம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா A.P.J அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு நினைவு நிகழ்வு ஒன்று நடைப்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், பொதுசன நூலகத்தில் அமைந்துள்ள இந்தியா கோர்னர் பகுதியில் இன்று இந்நிகழ்வு நடைப்பெற்றுள்ளது.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன், சிரேஸ்ட நூலகர் சுகந்தி சதாசிவமூர்த்தி மற்றும் நூலக அலுவலர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன், A.P.J அப்துல்கலாமின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து சிரேஸ்ட நூலகர் சுகந்தி சதாசிவமூர்த்தி மற்றும் ஏனைய நூலக அலுவலர்கள், வாசகர்கள் எனப் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.