சுற்றுலா விடுதிக்கருகில் ஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு: அதிர்ச்சி தகவல் அம்பலம்

Report Print Manju in சமூகம்

கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை உடநில்ம பிரதேசத்தில் சுற்றுலா விடுதிக்குச் செல்லும் வீதியில் பெண்ணொருவரும், ஆணொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கடந்த 2ம் திகதி யட்டியந்தோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் காரணமாக, யட்டியந்தொட்ட, அமனவெல பிரதேசத்தில் பலர் அதிர்ச்சி அடைந்ததுடன், சம்பவத்தைப் பற்றி அறிந்த பலர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். இறந்த இருவரும் யார் என்று கண்டுபிடிக்க அனைவரும் முயற்சித்தனர்.

உயிரிழந்த ஆண் சுனில் சாந்த என கண்டுபிடிக்கப்பட்டாலும் உயிரிழந்த பெண்ணை ரணால என்ற பிரதேசத்திலிருந்த வந்த ஒருவரால் மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் தான் உயிரிழந்த பெண்ணின் கணவர் நிசங்க.

உயிரிழிந்த ஆண் 27 வயதான திருமணமான சுனில் சாந்த எனவும், பெண் 26 வயதான சாகரிகா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனில் நதீகா என்ற பெண்ணை கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தித்துள்ளார். அவர் சந்திக்கும்போது நதீகா இரண்டு பிள்ளைகளின் தாய். அத்துடன் நதீகா நிறைய பிரச்சினைகளுடன் காணப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட நீண்டகாலம் எடுக்கவில்லை. சுனிலுக்கு நிரந்தர வேலை இல்லை. எனினும், பல்வேறு வேலைகள் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கூட்டுறவு நிலையத்தில் பணியாற்றியவர் சாகரிகா மற்றும் அவரின் கணவரான நிஸங்கவுக்கு, சுனில் குடும்பத்துடன் நட்பு இருந்தது.

அந்த நேரத்தில், கூட்டுறவு நிலையத்தின் மேலாளராக பணியாற்றிய சாகரிகா மற்றும் சுனில் ஆகியோர் சீக்கிரத்திலேயே, காதலிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களில் இருவர் ஒருவருக்கொருவர் இல்லாமல் வாழ முடியாது போனது.

இதற்கிடையில், சுனிலின் மனைவிக்கு இந்த உறவு பற்றி சந்தேகம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகம் கடந்த செப்டம்பர் 20ம் திகதி சுனிலின் பணப்பையில் இருந்த சிப் கார்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சாகரிக்காவின் வீட்டுக்குச்சென்று எச்சரித்துள்ளார் நதீகா. எனினும் சுனிலுடன் எந்த தொடர்பும் இல்லையென சாகரிகா தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து சுனில் சாகரிகாவிடம் பேசி முடிவெடுத்துள்ளார். அதன்பிறகு, இருவரும் திட்டத்தினை செயற்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

செப்டம்பர் 30ம் திகதி வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் சாகரிகா. ஆனால் அவள் கூட்டுறவு நிலையத்திற்கு செல்லவில்லை.

அவளுடைய கணவன் அதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் மனைவியைத் தேடியுள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சாகரிகா தனது நண்பிக்கு குறுந்தகவலொன்றை அனுப்பியிருந்தார். ”என்னை தேடவேண்டாம். குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள் என.”

அதனை அவள் சாகரிகாவின் கணவரிடம் தெரிவித்துள்ளார். குழப்பத்தில் நிசங்க யட்டியந்தோட்டைக்கு சென்று தேடியுள்ளார்.

அந்தநேரத்தில் சுனில் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருக்கும்போது தனது நண்பனுடன் தொலைபேசியில் தன்னுடைய உடலைப் பார்க்க வருமாறு தெரிவித்து விட்டு தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளான்.

சுனிலின் நண்பர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த போதிலும் அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அந்தநேரத்தில் சாகரிகா குறித்த இடத்தில் வந்து நின்றுள்ளார். அங்கு வந்த சுனில் சாகரிகாவை துப்பாக்கியால் சுட்ட பிறகு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

அருகிலுள்ள தொழிலாளர்கள் குறித்த இடத்திற்கு ஓடிவருவதற்குள் அங்கு இருவரின் உயிரும் பிரிந்துவிட்டது.