காணி விடுவிப்பு தொடர்பில் யாழில் விசேட கலந்துரையாடல்!

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்.மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகளின் விபரங்கள் மற்றும் அவற்றை விடுவிப்பதற்கு எடுக்கப்படவேண்டி நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும் இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஸன ஹெட்டியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.