தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்

Report Print Sumi in சமூகம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் பொலிஸார் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேரை இன்று காலை கைது செய்திருந்தனர்.

இதேவேளை, பிரதேச சபை உறுப்பினர் தலைப்பகுதியில் இரும்பு குழாயினால் தாக்கியுள்ளமையால் கொலை முயற்சி தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 300 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்துவதாகவும் மன்றில் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நீதிபதி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.