திருகோணமலை பேருந்து மார்க்கத்தில் மாற்றம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையில் இருந்து கிண்ணியா ஊடாக கண்டி செல்லும் பேருந்து, கண்டியில் இருந்து காலை 6.30 மணியளவில் திருகோணமலைக்கு திரும்பி வரும் போது கிண்ணியா ஊடாக செல்லாததனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா நகரசபை உறுப்பினர் அணீஸ் சக நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தியுடன் பேசிக் கொண்டதன் அடிப்படையில் இன்று இலங்கை போக்குவரத்து சபை மாவட்ட அத்தியட்சகரை சந்தித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

குறித்த பேச்சு வார்த்தைக்கு இனங்க கண்டியில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்படும் பேருந்தை நாளை முதல் கிண்ணியா ஊடாக திருமலை செல்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக அத்தியட்சர் இணக்கம் தெரிவித்ததாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.